புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

புதுச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, வேளச்சேரி பகுதியை சேர்ந்த கோதண்டமணியன் என்பவரின் மகன் அஸ்வின். 12 ஆம் வகுப்பு மாணவரான இவர், தனது நண்பர்களோடு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில், சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள பாரடைஸ் கடற்கரையில் அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது ஆஸ்வின் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து லைப்-பாய்ஸ் மற்றும் மீனவர்கள் மாயமான அஸ்வினை தேடி வந்த நிலையில், அதே பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.