தடையை மீறி மெரினாவில் குளிக்கும் பொதுமக்கள்... காவல்துறையினர் தொடர் எச்சரிக்கை...

கொரோனா அச்சமின்றி காலையிலே மெரினா கடற்கரையில் தடையை மீறி கடலில் குளித்து விளையாடும் பொதுமக்கள்.

தடையை மீறி மெரினாவில் குளிக்கும் பொதுமக்கள்... காவல்துறையினர் தொடர் எச்சரிக்கை...
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த ஏப்ரல் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடற்கரைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றின் வேகம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வந்ததால் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
 
மேலும் ஊரடங்கு தளர்வுகளாக கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல்  கடற்கரைகளில் நடைபயிற்சி  மேற்கொள்ள மட்டும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது .மேலும் கடலுக்குள் செல்லவும் குளிக்கவும் தற்போது வரை தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடையை மீறியும் கடலுக்குள் குளிக்க செல்கின்றனர்.
 
குறிப்பாக இன்று காலை மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையிலும் கடற்கரை மணற்பரப்பிலும் நடைபயிற்சி மட்டும் உடற்பயிற்சிய மேற்கொள்ளும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.. கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் தடையை மீறி கடலுக்குள்  சென்று குளித்து வந்தனர்.
 
மேலும் விடுமுறை நாட்களிலும் பொதுமக்களின் கூட்டம் மாலை நேரத்தில் அதிகரித்தே காணப்படுகிறது காணப்படுகிறது .இதனால் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.. மேலும் காவல்துறையினர் பொது மக்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அணியுமாறும் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர்.
 
கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடற்கரையில் மக்கள் கூட்டம் சேராதவாறு போலீசார் தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.