“மதம் சார்ந்த வெறுப்பு பிரசாரம் தவிர்க்கப்பட வேண்டும்” அமைச்சர் மனோ தங்கராஜ்!

“மதம் சார்ந்த வெறுப்பு பிரசாரம் தவிர்க்கப்பட வேண்டும்” அமைச்சர் மனோ தங்கராஜ்!

மதம் சார்ந்த வெறுப்பு பிரசாரங்களும், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களும் தவிர்க்கப்பட்டு மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பாக சித்ரவதைக்கு எதிரான மாநில அளவிலான பிரசாரத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. 

இதையும் படிக்க : உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர்...அடுத்து நடந்தது என்ன?

இதில், மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், நீதியரசருமான பாஸ்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சித்ரவதைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்பட வேண்டும் என கூறினார். 

இதனைத்தொடர்ந்து பேசியவர், மதம் சார்ந்த வெறுப்பு பிரச்சாரங்களும், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களும் தவிர்க்கப்பட்டு மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.