பிரதமர் மோடி : 2 நாள் அரசு முறை பயணம்- புதிய திட்டங்களுக்கு அடிக்கல் !!!

பிரதமர் மோடி : 2 நாள் அரசு முறை பயணம்- புதிய திட்டங்களுக்கு அடிக்கல் !!!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக தென்னிந்திய மாநிலங்களுக்கு வந்துள்ள பிரதமர் மோடி சென்னை பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்தோம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க | ராகுல் காந்தி தகுதி நீக்கம் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் தலைவர் கைது

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் முருகன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதன் பின்னர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்ஸ்டாலின்,  உரையாற்றுகின்றனர்...

இரண்டு நாள் அரசு முறை பயணமாக தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் சுற்றுப்பயணம்

தமிழ்நாட்டில், விமானநிலையம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை என மொத்தம் 5200 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

தாம்பரம் - செங்கோட்டை திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார்

மதுரை - செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் உயர் மட்ட பாலத்தினை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நத்தம் - துவரங்குறிச்சி இடையே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட சாலையை தொடங்கி வைக்கிறார்

திருமங்கலம் - வடுகப்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க | தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

வடுகப்பட்டி -  தெற்கு வெங்கநல்லூர் இடையே தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

இந்த திட்டங்கள் அனைத்தையும் காணொளி வாயிலாக பல்லாவரத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்

வான்வழிப் போக்குவரத்து, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை என மூன்று வகை போக்குவரத்து களில் 5200 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்