“தமிழ் கலாச்சாரம் உலகலாவியது” - பிரதமர் புகழாரம்!

தமிழ் மொழி நிலையானது என்றும் தமிழ் கலாச்சாரம் உலகலாவியது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

“தமிழ் கலாச்சாரம் உலகலாவியது” - பிரதமர் புகழாரம்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

செந்தமிழ் நாடேனும் போதினிலே என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கிய பிரதமர், தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாச்சாரம் உலகலாவியது என புகழாரம் சூட்டினார்.

ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சிறந்து விளங்குகிறார் என குறிப்பிட்ட பிரதமர், இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பங்களிப்பு உள்ளதாகக் கூறினார்.  

தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தின் மேலும் ஒரு அத்தியாயம் இந்த விழா என பெருமிதத்துடன் கூறிய பிரதமர் மோடி,  தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்க முடியும் என்றும், இந்திய மொழிகளை ஊக்குவிக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.