தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு...

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என். ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு...

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த  நிலையில் இன்று முதல், பஞ்சாப் ஆளுனராக மட்டும்  பன்வாரிலால் புரோகித் பதவி விகப்பார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என். ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப் பித்துள்ளார்.  இவர் நாகலாந்து ஆளுனராக செயல்பட்டு வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவி,  கடந்த 1976ம் ஆண்டு ஐ. பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கினார். மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். உளவுத்துறை சிறப்பு இயக்குனராகவும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப் பிடதக்கது..