தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு... ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு பிரதோஷ பூஜை...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு... ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு பிரதோஷ பூஜை...

ஆவணி மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு பிரதோஷ பூஜை  நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

ஆவணி மாதம் வரலட்சுமி விரதத்தன்று வந்த வளர்பிறை பிரதோஷ விழாவில் கொரனோ தொற்று தடுப்பு நடவடிக்கையால் நேற்று பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை இதனால், எளிய முறையில் பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டு, தமிழ் முறைப்படி அர்ச்சனையும் நடைபெற்றது.