கூலி உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்...!

கூலி உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள்  காலவரையற்ற போராட்டம்...!

அந்தியூரில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகளில் லுங்கி மற்றும் துண்டுகள் உள்ளிட்ட ஜவுளி வகைகள் உற்பத்தி செய்யபடுகின்றது.

இதையும் படிக்க : என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது - ராகுல்காந்தி பேச்சு!

இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காததால் ஆத்திரமடைந்த விசைத்தறி உரிமையாளர்கள், விலைவாசி ஏற்றம் நூல் விலை உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 20 சதவீதம் கூடுதலாக கூலி உயர்வு கேட்டு  கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வேலை நிறுத்த போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். இதனால் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காததால், சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.