நடிகை நம்பர் கேட்டு மிரட்டிய சம்பவத்தின் திடீர் திருப்பம்!!!

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்ததித் தொடர்ந்து, தற்போது இது பெரும் சர்ச்சையாக கிளம்பியுள்ளது.

நடிகை நம்பர் கேட்டு மிரட்டிய சம்பவத்தின் திடீர் திருப்பம்!!!

நடிகை பத்மபிரியாவை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் Youtube பிரபலம் சூர்யா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் நடிகை பத்மபிரியா செல்போன் நம்பரை கேட்டு, கேமரா மேன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமாபுரம் காவல் நிலையத்தில் கேமரா மேன் பிரபு என்பவர் புகார் அளைத்திருந்தார்.

யூடியூபில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக இருந்து வரும் சூர்யா என்பவர் மீது, பிரபு புகார் அளித்திருந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஒன்று வந்துள்ளது. தன் மீது புகாரளித்த கேமரா மேன் பிரபுவால் பாலியல் ரீதியாக பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த யூடியூபர் சூரியா கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து நடிகை பத்மபிரியாவை நேரில் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்தால் உண்மைகள் வெளிவரும் என்றும் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்...!