கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை ட்ரோன் மூலம் மடக்கிப்பிடித்த போலீசார்...

கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை ட்ரோன் மூலம் மடக்கிப்பிடித்த போலீசார்...

திருச்சியில் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதை வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 


ஊரடங்கை மீறிய இளைஞர்கள், திருச்சியில் உள்ள மைதானத்தில் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடியுள்ளனர். தகவலறிந்த போலீசார், டிரோனை பறக்க விட்டு கண்காணித்தனர். அப்போது தலை தெறிக்க ஓடிய இளைஞர்கள், மரத்தடியில் மறைந்தும், இருசக்கர வாகனங்களில் தப்பியோடவும் முயற்சி செய்தனர். இருப்பினும் அவர்களை மடக்கி பிடித்து எச்சரித்துள்ள போலீசார், விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் போலீச லெப்ட-ல வச்சுக்கோ… ரைட்ல வச்சுக்கோ… ஆனா ஸ்ட்ரெயிட்டா வச்சுக்காதன்னு கூறும் ரஜினியின் வசனங்கள் மற்றும் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் தீம் பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திருச்சி மாநகர போலீசாரின் இந்த விழிப்புணர்வு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.