இரவில் சாயக்கழிவை வெளியேற்றும் ஆலைகள்... மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாயக்கழிவு நீரை வெளியேற்றிவிடும் ஆலைகள் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரவில் சாயக்கழிவை வெளியேற்றும் ஆலைகள்... மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் காவேரி ஆற்றின் கரையோரமாக உள்ள சமய சங்கிலி பகுதிகளில் செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆவத்திபாளையம், சமயங்களில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் ஆய்வு நடத்தினர் அப்போது கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வழிமுறைகள் குறித்து பார்வையிட்டு தண்ணீரின் தரம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இயந்திரங்களை தன்மையும் கழிவுநீரை ஆழ்துளை கிணறு மூலமாக வெளியேற்றப்படுகிறது என அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் வெளியேற்றினாள் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச்சென்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் வெளியேற்றும் சாய சலவை ஆலைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.