காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்: டிஜிபிக்கு கடிதம் எழுதிய போக்குவரத்து துறை...

காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவரம் கேட்டு தமிழக டிஜிபிசைலேந்திரபாபுவுக்கு போக்குவரத்து துறை கடிதம் எழுதியுள்ளது.

காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்: டிஜிபிக்கு கடிதம் எழுதிய போக்குவரத்து துறை...

சட்டசபை கூட்டத்தொடரின் போது, காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க ஏதுவாக காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தநிலையில் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளும் காவலர் எண்ணிக்கை மற்றும் அவர்களது விவரம் கேட்டு, தமிழக டிஜிபிக்கு போக்குவரத்து துறை துணைச் செயலாளர் உதய பாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இத்திட்டபடி சென்னையில் குளிர்சாதன பேருந்து தவிர பிற பேருந்துகளில் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி காவலர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும் பிற மாவட்டங்களில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் வரிசையில் காவலர்களும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.