மீண்டும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை...

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மீண்டும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை...

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த 5 நாட்களாக ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று மட்டும் ரூபாயின் மதிப்பு 9 காசுகள் குறைந்து 74 ரூபாய் 23 காசுகளில் நிலைபெற்றதால், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கூடுதல் ரூபாய் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து  99 ரூபாய் 58 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்திருந்த நிலையில், அதன் விலை மீண்டும் 100 ரூபாயை நெருங்குவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.