"எங்கப்பா இது".. வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

கோவையில், நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எங்கப்பா இது".. வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

அஜித்குமார் - வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் நள்ளிரவு  முதலே தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கோவை 100 அடி சாலையில் கங்கா திரையரங்கம் முன்பு வலிமை திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசியுள்ளனர். இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்தது. இதில் ஒருசில இது சக்கர வாகனங்கள் லேசான சேதமடைந்ததுடன், அங்கு இருந்த ராமச்சந்திரன் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

திரையரங்கம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்த போது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதுகுறித்து காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ,அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.