நெகிழ்ச்சி ஏற்படுத்திய 5 ஆம் வகுப்பு மாணவி...அரசு நூலகம் வேண்டி கோரிக்கை மனு...!

நெகிழ்ச்சி ஏற்படுத்திய 5 ஆம் வகுப்பு மாணவி...அரசு நூலகம் வேண்டி கோரிக்கை மனு...!

விழுப்புரம்  அருகே அரசு நூலகம் அமைத்துத் தரக்கோரி பள்ளி சிறுமி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி வருனிதா, தங்கள் ஊரில் அரசு நூலகம் அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பின்னர் தனது கோரிக்கை குறித்து பேசிய மாணவி வருனிதா, எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஓய்வு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு சென்று விளையாடுவதால் விஷ சந்துக்கள் தீண்டி பாதிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிக்க : நாகலாந்து, மேகாலயா தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

இதனால் எங்கள் ஊரில் ஒரு அரசு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய மாணவி, மாவட்ட ஆட்சியர் பள்ளியிலேயே நூலகம் அமைத்து தருவதாக உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார். 

மேலும், தனது ஊருக்கு நூலகம் கேட்டு ஐந்தாம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.