புதிதாக 10 அரசு,கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி....தமிழக அரசு அரசாணை வெளியீடு

2022 - 23 கல்வியாண்டு முதல் தமிழகத்தில் புதிதாக 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிதாக 10 அரசு,கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி....தமிழக அரசு அரசாணை வெளியீடு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் எரியூர்,  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மற்றும் வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல்  ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் மற்றும் 17 ஆசிரியரல்லா பணியிடங்கள் வீதம் 10 கல்லூரிகளுக்கு மொத்தம் 170 ஆசிரியர்கள் மற்றும் 170 ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

அதுமட்டுமின்றி, கல்லூரிகளுக்கு ஓர் ஆண்டுக்கான தொடர் செலவினமாக 21 கோடியும், தொடராச் செலவினமாக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.