ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி...!

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி...!

ஒகேனக்கல்லில் நான்கு நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கபட்டுள்ளது. 

கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது இந்த நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆட்சியில் நீர்வரத்து படிப்படியாக குறைத்து தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி எட்டாயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து  தற்போதைய நிலவரப்படி 6500 கன அடியாகவும்   குறைந்துள்ளது இந்த நீர் வரத்து குறைவால் கடந்த மூன்று நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க    |  தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது....!