மத்திய தேர்தல் ஆணையம் ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்தால் மக்கள் வரவேற்பார்கள் - அண்ணாமலை பேட்டி

மத்திய தேர்தல் ஆணையம் ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்தால் மக்கள் வரவேற்பார்கள் - அண்ணாமலை பேட்டி

இராணுவ வீரர் உயிரிழப்பு ,தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை  கண்டித்து பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்  சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உண்ணவிரத போராட்டம்  நடைபெற்றது.

மேலும் படிக்க | கோயில் உண்டியலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்...விடாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள்

 செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை;-

முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு-வுக்கு நடந்துள்ளது எந்த இராணுவ வீரருக்கும் நடக்க கூடாது.பிரபு உயிரிழந்த விஷயத்தில் மாநில அரசு நிகழ்வை கண்டித்த விதம் வருத்தம் அளிக்கிறது.பிரபு உயிரிழப்புக்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை.. திமுக கவுன்சிலர் கைது..  நடந்தது என்ன? | Indian army Soldier beaten to death near Krishnagiri : DMK  councilor arrested - Tamil Oneindia

முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. திறமைக்கும் நேர்மைக்கும் தமிழக காவல்துறையில் இப்போது வேலை இல்லை.ஈரோடு கிழக்கு தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் படுதோல்வி அடைந்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையர் இடைத்தேர்தலை ரத்து செய்தால் கூட அதனை மக்கள் வரவேற்பார்கள் என்றார்.

அதுமட்டுமின்றி பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் தொடர்ந்து வன்மையான கண்டனங்களை தெரிவித்தார்.

மேலும் படிக்க | 10 ஆண்டுகள் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 544 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.பொதிகை அலுவலகம் வரை சுமார் 500 மீட்டர் பேரணி நடைபெற்றது. பேரணையின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்