தொடர் மழையால் சிக்கி தவிக்கும் வாகனங்கள்...தண்ணீரை உடனுக்குடன் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை!

தொடர் மழையால் சிக்கி தவிக்கும் வாகனங்கள்...தண்ணீரை உடனுக்குடன் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை!

தொடர் மழையால் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஓ.எம். ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், துரைப்பாக்கம், உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர் .

இதேபோன்று சென்னை புறநகர் பகுதியான, தரமணி - பெருங்குடி இணைக்கும் எம்.ஜி.ஆர் சாலையில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதையும் படிக்க : தண்ணீரில் மிதக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்...ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

இதேபோன்று சென்னை அடுத்த ஆற்காடு போரூர் சாலை,  மவுண்ட்- பூந்தமல்லி சாலை, குன்றத்தூர் நெடுஞ்சாலை ஆகிய முக்கிய சாலைகளில், மழை நீர் முழுவதுமாக சூழந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதேபோன்று, சென்னை வியாசர்பாடி,  ஜீவா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் நான்கு அடிக்கும் மேல் மழை நீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொடுங்கையூர், வியாசர்பாடி செல்லும் பொதுமக்கள் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் வழியாக செல்கின்றனர். நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.