சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட லேசான நில அதிர்வால் பீதியில் உறைந்த மக்கள்...

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட  லேசான நில அதிர்வால் பீதியில் உறைந்த  மக்கள்...

சென்னை - ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்ககடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் சென்னைக்கு இடையே, சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டு உருவானதாகக் கூறப்படுகிறது.

சரியாக பகல் 12. 35 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட சென்னையின் மையப் பகுதிகளில் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததால் பீதியில் உறைந்துபோயினர்.