விடுமுறை நாளில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்!

விடுமுறை நாளையொட்டி உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

விடுமுறை நாளில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

வார விடுமுறை நாளான இன்று சற்று அதிகரித்து தூண் பாறை, குணா குகை, மன்னவனூர் ஏரி ,பிரயன்ட் பூங்கா படகு சவாரி என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வாகன அணி வகுப்பால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் மலைகளின் அரசியான உதகையிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கோடை விழாவையொட்டி வனத்துறை சார்பில் தோட்டக்கலை பயிற்சி அரங்கில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீரோடைகள், மலைகள், யானை, புலி, மான், செந்நாய்கள், காட்டு மாடுகள் மற்றும் பறவை இனங்களின் புகைப்படத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அசைவுகவரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.