2 கோடி செலவில் 5 சிக்னலில் 61 கேமாரக்கள்... விதிகளை மீறினால் செல்போனுக்கு அபராத ரசீது... கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை...

சாலை விதிகளை மீறினால் கணினி தானியங்கி புரோகிரோம் மூலம் அபராத ரசீது செல்போனுக்கு அனுப்பப்படும் என்று கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2 கோடி செலவில் 5 சிக்னலில்  61 கேமாரக்கள்... விதிகளை மீறினால் செல்போனுக்கு அபராத ரசீது... கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை...
அண்ணாநகர் ரவுண்டான அருகில் அண்ணாநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முக்கியமான 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு கணினி தானியங்கி புரோகிராம் மூலம் விதிமீறல் தொடர்பான போக்குவரத்து செலான்களை அனுப்பும் முறையை சென்னை மாநகர் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
 
இந்த கேமராக்கள் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரை புகைப்படம் எடுத்து அதை  சர்வருக்கு அனுப்பி விபரங்கள் சேமிக்கபட்டு வாகன உரிமையாளர்களுக்கு தானியங்கி முறையில் அபாராதம் விதிக்கப்பட்டு அவருடைய செல்போன் எண்ணுக்கு அபராத செலான்கள் அனுப்படும்.
 
இந்த நிகழ்வை துவக்கி வைத்து பேசிய சென்னை காவல் ஆணையர் ஏற்கனவே பழைய நடைமுறையில் நாளொன்றுக்கு 800 வழக்குகள் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. ஆனால் தற்போது இந்த தொழிட்நுட்பத்தை பயன்படுத்தி 1 லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்ய முடியுமென தெரிவித்தார். சென்னை முழுவதும் இந்த தொழிட்நுட்பத்தை  பயன்படுத்த திட்ட மிட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
 
மேலும் சென்னை முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதை தொழிநுட்ப அடிப்படையில் கண்காணிக்க உள்ளோம் அது குறித்து நடவடிக்கை  எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.