புறம்போக்கு நிலங்களுக்கு பட்டாவா... வழியை கண்டுபிடித்துள்ள அமைச்சர்...!!!

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டாவா... வழியை கண்டுபிடித்துள்ள அமைச்சர்...!!!

தந்தை பெரியார் இல்லத்திற்கு பட்டா இல்லாத நிலையில் விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரிய பணி:

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பின்பு பதிலுரை அளித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், ஒரு சென்ட் நிலம் வைத்து இருந்தாலும் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அது உங்களது தான் என்று சொல்லும் துறை தான் வருவாய் துறை என்றும் சான்றிதழ்களில் வழங்குவது பெரிய பணி என்றும் கூறினார். 

நிலுவையில்:

ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் 4,65,000 சான்றிதழ் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும், முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில்  பணிகள் விரைவாக மேற்கொண்டு தற்போது 785 சான்றிதழ் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையை சுற்றி:

வீட்டு மனை பட்டாவை பொறுத்தவரை அரசு புறம்போக்கு, அரசுக்கு சொந்தமாக இருந்தால் பட்டா கொடுக்கமுடியாது எனவும் ஆனால் அரசுக்கு சொந்தமான கிராம புறம்போக்கு நிலமாக இருந்தால் பட்டா கொடுக்கலாம் எனவும் அதற்கான வழியை கண்டுபிடித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.  அதிலும், சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டா பிரச்சனை பெரிதாக பேசுவதாகவும்,  அந்த நான்கு மாவட்டங்களில் பட்டா பிரச்சினை தொடர்பாக பேரவை கூட்டத் தொடர்  முடிந்த  பின்பு, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி  பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

வீடுகள் கட்ட...:

நரிகுறவர்கள், இருளர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 48 ஆயிரம் இருளர்கள் மற்றும் நரிக்குறவர்கள் குடும்பங்கள் கண்டறியப்பட்டு 33,607 பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  அதோடு  அவர்கள் வீடு கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  கூறினார்.

பட்டா இல்லா வீடுகள்:

ஈரோட்டில் ஈவி,கே,எஸ் இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என்றும் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்பதோடு,  தந்தை பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்ற சூழலில் தற்போது அனைவருக்கும் பட்டா கொடுக்கவுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் பத்து ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டதாகவும், இதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பதலளித்தார்.

இதையும் படிக்க:  பிச்சைக்காரன் 2 தடைகோரிய வழக்கு... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?!!