கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்த பெற்றோர்கள்...!

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில்  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆர்.கே. பேட்டையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் புறக்கணித்தனர்.

கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட  பள்ளிகள்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்த  பெற்றோர்கள்...!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே ராஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில் வீடு கட்டி குடியேற மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இந்த எதிர்ப்பை மீறி  சர்வே செய்து இலவச வீட்டுமனைப் பட்டாவை பயனாளிகளுக்கு வருவாய்த்துறையினர் வழங்கினர். இதனை கண்டித்து ராஜானகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும் பட்டியலின மக்கள் இலவச வீட்டு மனை பட்டாவில்  வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி ஆதிக்க போக்கு கொண்ட  மக்கள்  தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பை தெரிவித்தனர். 

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்ததால், பள்ளி வெறிச்சோடி காணப்பட்டது. ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கிராமத்திற்குள் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.