சாக்கடையில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்...

உளுந்தூர்பேட்டையில் சாக்கடையில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சாக்கடையில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்...

கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர்பேட்டைஒன்றியம் கிளியூர் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்று முதல் பணியாக சாக்கடையை சுத்தம் செய்யும் பணியே முதல் பணி என்று பஞ்சாயத்து தலைவர்  அலமேலுபாலு  மற்றும்பஞ்சாயத்துதுணைதலைவர், சாக்கடையில் இறங்கி தூர்வாரினார்கள்.

பருவமழைதொடங்கியதால்  சாக்கடைகள் செல்லக்கூடிய கால்வாயில் குப்பைகள், புல் பூண்டு செடிகள் ஏராளமாக இருந்தது. கிராமங்களில் பொதுமக்கள் அன்றாடம் பயன் படுத்தும் தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் வந்தால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமங்களில் முறையாக எந்த அடிப்படை வசதிகளும் வாட்டார வளர்ச்சி அலுவலகம் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து எழுத்தாளர் எதுவுமே செய்யவில்லை. அரசியல் பிரமுகர்கள் தலையிட்டும் இல்லை என்றால் எமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களை தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்தில் முன்மாதிரியானபஞ்சாயத்தாக கொண்டு வருவோம் ன்று தலைவர் அலமேலு பாலு மற்றும் துணைத் தலைவர் தெரிவித்தனர்.