பனை விதைகள் நடுவதற்கான துவக்க விழா!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 22 லட்சம் பனை விதைகள் நடுவதற்கான துவக்க விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கக்கோரி மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில் தமிழ்நாடு பளைத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து மாவட்டம் முழுவதும் 22 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் 22 லட்சம் பனை விதைகள் நடப்பட உள்ளன. பனைமரம் விதைகள் நடும் விழாவிற்கு சமூக நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி பனைமர விதைகளை நட்டு பொதுமக்களுக்கு பனை விதைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.