குப்பை கொட்டுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்…  

தஞ்சையில் இடம் இல்லாத காரணத்தால் குப்பை கொட்டும் இடத்தில் நெல்மணிகளை கொட்டி வைக்கும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

குப்பை கொட்டுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்…   

தஞ்சையில் இடம் இல்லாத காரணத்தால் குப்பை கொட்டும் இடத்தில் நெல்மணிகளை கொட்டி வைக்கும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாரியம்மன் கோவில், பூண்டி, ஒரத்தநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள், கொள்முதல் நிலையங்கள் மற்றும் சாலைகளில் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையோரத்தில் நெல்லை கொட்ட கூடாது என கூறப்பட்டதையடுத்து, செய்வதறியாது திகைத்த விவசாயிகள், குப்பை கொட்டும் இடத்தில் நெல்மணிகளை கொட்டி வைத்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தார்ப்பாய் கொண்டு மூடி  நெல் மணிகளை பாதுகாத்து வரும் விவசாயிகள், குப்பைகளில் சுற்றி திரியும் பன்றிகளிடம் இருந்து நெல்களை காப்பாற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவற்றில் காவல் இருந்து வருகின்றனர். தார்பாயின் உள்ளேயே படுத்துக் கொண்டு விடிய விடிய காவல்காக்கும் விவசாயிகள்,  கண்ணசையும் வேளையில் தார்பாய்களை கிழித்து பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், நெல்மணிகளை கொள்முதல் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.