’’ஆறு போன்று இருந்த பாமக கட்சி, தற்போது குட்டையாக மாறிவிட்டது’’  இராமதாஸ் உருக்கம்

’’ஆறு போன்று இருந்த பாமக கட்சி, தற்போது குட்டையாக மாறிவிட்டது’’  இராமதாஸ் உருக்கம்

"ஆறு போன்று இருந்த பாமக கட்சி, தற்போது குட்டையாக மாறிவிட்டது"  என திண்டிவனத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசினார்.

அப்போது அவர், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக மாநாடு நடத்த வேண்டிய நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் நடத்த முடியாமல் போய்விட்டது. இருப்பினும் மிக விரைவில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக மாநாடு விரைவில் நடத்துவோம் என்று கூறினார்.

மேலும், "இட ஒதுக்கீடு போராட்டத்தில் எனக்கு பதிலாக துப்பாக்கி குண்டு வாங்கிக் கொண்டு இன்று வரை உயிரோடு இருக்கின்ற செல்வராஜ் போன்று கட்சிக்காக உழைத்தவர்கள் யாரும் நமது கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகவில்லை. அதனால்தான் நமது கட்சி ஆறு போன்று இருந்த நிலையில் தற்போது சுருங்கி குட்டை போன்று மாறிவிட்டது" என்று உருக்கமாக பேசினார்.

சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் இதுபோன்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளது கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??