பூமியையும் மனிதநேயத்தையும் காப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தியதால் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார்.

பூமியையும் மனிதநேயத்தையும் காப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தஞ்சை மாவட்டத்தில் ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில்  த்திற்கு சென்று ஓலைச்சுவடிகளை பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து  முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவரகளுது  கோரிக்கைகள் மனுவையும் பெற்றுக் கொண்டார்.  தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலிலும்  ஆர்என் ரவி வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரத்தில் நடைபெற்ற வித்யா வித்யாலயா வேதபாடசாலை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, பூமியையும் மனிதநேயத்தையும் காப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். 

ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது இயற்கை வேளாண் முறைக்கு விவசாயிகள் திரும்பி வருவது வரவேற்கத்தக்கது என்றார். இதன் மூலம் பூமியை காப்பாற்ற முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.