அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக அறிவிப்பு...

50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக அறிவிப்பு...

50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில், நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டார்.

மேலும் மதிய உணவில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி & முட்டை வழங்கும் திட்டமும் விரைந்து அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால், மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் தீவிர கண்காணிப்பு தேவை என்ற அவர், உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யவும் CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார்.