மெட்ரோ பயணிகளின் வசதிக்காக மினி பஸ்... முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்...

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக மினி பேருந்துகள் இயக்கம்

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக மினி பஸ்... முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்...

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் மினி பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன் படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்  210 சிறிய பேருந்துகளைக் கொண்டுள்ளதாகவும், அதில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பயணிகளின் பயன்பாடு குறைந்து, இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 சிறிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  நிறுத்தப்பட்டுள்ள இச்சிறிய பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டு, முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நடைப்பெறும் நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, போக்குவரத்துறை செயலாளர் கோபால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.