கருப்பாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு...

கடையநல்லூர் அருகே, கருப்பாநதி அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

கருப்பாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு...

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின்படி, பிசான சாகுபடி பாசனத்துக்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடையநல்லூரில் உள்ள கருப்பாநதி அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும், தி. மு.க. மாவட்ட செயலாளர் செல்லத்துரை, உள்ளிட்டோர் கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்து, மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். நீர் திறப்பின் மூலம், 9 ஆயிரத்து, 514 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.