நவ.1-ல் இருந்து 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்புகள், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த நவம்பர் 1-ந்தேதியில் இருந்து அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.