அதிமுகவில் மட்டும்தான் எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் காமராஜ்!

அதிமுகவில் மட்டும்தான் எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் காமராஜ்!

எதிரியையும், துரோகியையும் ஒரே நேரத்தில் வெல்லக் கூடிய வல்லமை படைத்த கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், மற்ற கட்சிகளில் எதிரிகள் மட்டும் தான் இருப்பார்கள், ஆனால் அதிமுகவில் மட்டும்தான் எதிரிகளும் இருப்பார்கள், துரோகிகளும் இருப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிக்க : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்...தேதி அறிவிப்பு!

தொடர்ந்து, எதிரியையும், துரோகியையும் ஒரே நேரத்தில் வெல்லக் கூடிய வல்லமை படைத்த கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.