ஆன்லைன் சூதாட்ட வழக்கு; தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு; தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

வழக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது எனவும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், இந்த சட்ட கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,  அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கடந்த விசாரணையின் போது வாதங்கள் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

இன்று, வழக்குகள் விசாரணைக்கு வந்த போது,  மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.   இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி; காவல்துறையின் தோல்வி; இ.பி.எஸ். விமர்சனம்!