திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி- குஷியில் திரையரங்கு உரிமையாளர்கள்!!

திரையரங்குகளில்  100% பார்வையாளர்களுக்கு அனுமதி- குஷியில் திரையரங்கு உரிமையாளர்கள்!!

திரையரங்குகளில் நூறு சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கினை மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு, வருகிற 16ம் தேதி முதல் திரையரங்குகள் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும்  திரையரங்கு உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். உணவகங்களிலும் 10  சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.