காதலர் தின ஸ்பெஷலான ரோஜாப்பூக்கள்...வரத்து குறைந்ததால் விலை உயர்வு!!

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக சென்னை வந்தடைந்தது. 

காதலர் தின ஸ்பெஷலான ரோஜாப்பூக்கள்...வரத்து குறைந்ததால் விலை உயர்வு!!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தில் காதலர்கள் ரோஜாப்பூ வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆண்டுதோறும் ஓசூர், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மலர் அங்காடிக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை கோயம்பேடு பூ வர்த்தக அங்காடிக்கு  ரோஜா பூக்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இயல்பை விட மழை அதிகம் பெய்ததால் ஊட்டி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்களின் விளைச்சல் குறைந்ததாகவும்,  இதன் எதிரொலியாக பூக்களின் வரத்து  குறைந்ததால் விலை சற்று ஏற்றத்துடனே காணப்படுவதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் பூக்களின் வரவு கூடுதலாக இருந்ததால் வியாபாரமும் கூடுதலாக நடைபெற்றதாக வியாபாரிகள்  கூறியுள்ளனர்.