கலைஞர் நூற்றாண்டு வந்தாலும் ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் - மா.சுப்பிரமணியன்!

கலைஞர் நூற்றாண்டு வந்தாலும் ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் - மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான தனியார் கல்லூரி கலந்தாய்வு குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்படும் கூடுதல் பணி சுமையால் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகும் தகவல் தவறானது. உயிரிழப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது, பணியில் இருக்கும் மருத்துவர்களின் உயிரிழப்புக்கு மன அழுத்தமே பிரதான காரணம் என குறிப்பிட முடியாது என கூறினார். 

இதையும் படிக்க : அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறக்கப்பட்டாலும், ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் என கூறினார்.