கோயில் உண்டியலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்...விடாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள்..!

கோயில் உண்டியலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்...விடாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள்..!

நாகையில் உள்ள அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோயில் உண்டியலுக்கு, இந்து சமய அறநிலைத்துறையினர் சீல் வைத்ததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை பொது அலுவலக சாலையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயில் கணக்குகள் குறித்த புகாரின் அடிப்படையில், கோயிலுக்கு வந்த நாகை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி உத்தரவின்பேரில் அதிகாரிகள் கோயில் உண்டியலுக்கு சீல் வைத்தனர்.

இதையும் படிக்க : திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு... பகிரங்க மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன்...!

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நாகூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி, உண்டியலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டு சாவிக்கு சீல் வைத்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.