ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி...எதற்காக தெரியுமா?

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி...எதற்காக தெரியுமா?

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் ஒட்டன் சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி , திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

விவசாயிகள் கவலை:

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் விவசாயிகள் முழுமையாக பயன்பெற வேண்டுமெனில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிஏபி பாசன திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 25 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதால், கோடிக்கணக்கான தென்னைமரம்  மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போராட்டம்:

அதனால் தமிழ்நாடு-கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆழியாரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.