ஒ.பி.எஸ் ஸுக்கும் அதிமுகவிற்கும் எந்த  தொடர்பும் கிடையாது...! காமராஜ் அதிரடி...!!

ஒ.பி.எஸ் ஸுக்கும் அதிமுகவிற்கும் எந்த  தொடர்பும் கிடையாது...! காமராஜ் அதிரடி...!!

முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த  தொடர்பும் கிடையாது என முன்னாள் அமைச்சா் காமராஜ் கூறியுள்ளார்.

தஞ்சையில் அதிமுக சார்பில் உறுப்பினா் சேர்க்கைகான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்  முன்னாள் அமைச்சா் காமராஜ் கலந்துகொண்டு உறுப்பினா் சேர்க்கைகான படிவத்தை அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினா். அதன் பின் செய்தியாளா்களை சந்தித்த அவா், "அதிமுக என்பது எடப்பாடி தலைமையிலான இயக்கம் தான் என்பதை தொண்டர்கள் நிர்வாகிகள் நீதிமன்றம் உறுதி செய்து விட்டது. எனவே ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்  ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது" என தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது என கூறினார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் தொிவித்தார்.