கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா - உடன் ஓ.பி. எஸ். அணியினர் திடீர் சந்திப்பு...!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா - உடன் ஓ.பி. எஸ். அணியினர் திடீர் சந்திப்பு...!

இந்நிலையில் திடீரென ஓ.பி. எஸ். அணியின் சார்பாக  அவரின்ஆதரவாளர் திரு. புகழேந்தி இன்று காலை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா -வை  சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்பில் அவர்கள்  கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அதிமுக கட்சி நிர்வாகிகள்  தேர்தல் சமயங்களில் பாஜக-விற்கு உறுதுணையாக இருந்து  கடுமையாக உழைத்திருப்பதாகவும், கர்நாடகவில் தேர்தல் வர இருக்கும் இந்த சமயத்தில் ஓ.பி. எஸ். அணியினரான தங்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டியும் அவ்வாறு வாய்ப்பளித்தால் தங்களால் நிச்சயமாக வெற்றி வாக்குகள்  கிடைக்கும் எனவும்  உறுதியளித்தார். மேலும் 
அதிமுக-விற்கும்  எடியூரப்பா-விற்கும்  இடையேயான அரசியல் பந்தம் தொடர்பாகவும் பேசினார். அதிமுக - வின் அதிகாரபூர்வ பொதுச்செயலாளராக ஈ. பி. எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இது தொடர்பாக  செயற்குழு கூட்டத்தை அமைத்து இது தொடர்பாக பேச இருப்பதாக இருந்த நிலையில் தற்போது ஓ. பி. எஸ். அணியினர் விரைந்து செயல்பட்டு  இந்த சந்திப்பினை மேற்கொண்டது  அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஓ.பி. எஸ். மற்றும் ஈ. பி. எஸ். அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது கர்நாடக தேர்தல் வரை  சென்று  இன்னும் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கிறது.