இனி பெண்கள் வேலைக்கு லேட்டா வரலாம்..! புதுச்சேரியில் அரசு துறை பெண்களுக்கு புதிய சலுகை..!

இனி பெண்கள் வேலைக்கு லேட்டா வரலாம்..!  புதுச்சேரியில் அரசு துறை பெண்களுக்கு புதிய சலுகை..!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில்  இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளில் வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ்ட் நோயை முடிவுக்கு கொண்டு வர மாநில செயல் திட்டத்தை செயல்படுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். 

அந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் "காசநோயை ஒழிக்க அனைத்து முயற்சிகளும்  நடக்கிறது என்றும், இதுவரை 27 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே எடுத்துள்ளதாகவும் கூறினார். 

 மேலும், வேறு மாநிலங்களைவிட அதிக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்ததாகவும், அதனை முதல்வர் ஏற்றுள்ளதாகவும் கூறினார். 

மேலும், தற்போது அரசு துறையில் அமலாகும் இந்த சலுகையின்படி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு பெண் ஊழியர்கள் பணிக்கு வரலாம். வேலை நேரம் பற்றி வேறு மாதிரி சொல்லிக் கொண்டிருக்கும்போது, இந்த அறிவிப்பு புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். 

இதையும் படிக்க     }  கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக...!!

அதோடு,  புதுச்சேரியை  பொறுத்தவரை குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் சலுகையும், வேலை நேர சலுகையும் தரப்படுகிறது என்றார்.

இதையும் படிக்க     } "தமிழனாக இருக்கும் அண்ணாமலை முன்பு இது நடந்திருப்பது கண்டனத்திற்குரியது...!" - கர்நாடகா திமுக.