சாலையோரம் மயங்கி கிடந்த வடமாநில இளம்பெண்...பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்...!

திருவண்ணாமலை செய்யாறு அருகே நள்ளிரவில் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில இளம்பெண்ணை, போலீசார் தாயுள்ளத்துடன் மீட்டு காப்பகத்தில ஓப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலையோரம் மயங்கி கிடந்த வடமாநில இளம்பெண்...பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்...!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கின் போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் சாலையில் இரவு நேரத்தில் போலீசார், கண்காணிப்பு   பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 25 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய கிடந்ததை பார்த்த அதிகாரிகள், செய்யாறு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு உடனியாக மருத்துவமனையில் அனுமதிக்க உத்திரவிட்டனர்.

அதன்பின்னர் அங்கிருந்த பெண் காவலர்கள் இளம்பெண்ணை மீட்டு போலீஸ் ஜீப்பிலேயே ஏற்றி சென்று செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சையை அடுத்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பாபிதாஸ் என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த பெண் அளித்த செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போலீசார், எதிர்முனையில் பேசியவரிடம் இளம்பெண் குறித்து பேசினர். அதில் அந்த பெண்ணிற்கு திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டர் என்பதும் வேலைக்காக ஒடிசாவில் இருந்து சென்னை வந்ததும் தெரியவந்தது. அதன்பின்னர் அந்த இளம்பெண்ணை போலீசார், செய்யாறில் உள்ள மாவா என்ற முதியோர் இல்லத்தில் தங்க வைத்தனர்.