துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகப்பட்டினம் மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் 3ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றம்...

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதன் காரணமாக அதிவேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும் கனமழை பெய்து வருவதாலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  இதேபோல், சென்னை, எண்ணூர் துறைமுகத்திலும் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.