புதிதாக தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க தேவையில்லை... அமைச்சர் கணேசன்!!

புதிதாக தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க தேவையில்லை... அமைச்சர் கணேசன்!!

தொழில்துறை 4.0 தரத்திலான பயிற்சியை அரசு வழங்கி வருவதால், நடப்பாண்டில் 76% ஐடிஐ மாணவர்களுக்கு வளாகத் தேர்வில் பணி கிடைத்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

கேள்வி:

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், வந்தவாசி தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 

தேவையில்லை:

இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,  ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 22 தனியாக தொழில்பயிற்சி நிலையங்களும் உள்ளதாகவும்,இங்கு மொத்தமுள்ள 2468 இடங்களில் 833 இடங்கள் காலியாக உள்ளது என்றும், எனவே புதிதாக தொழில்பயிற்சி நிலையங்கள் அமைக்க தேவையில்லை என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில்:

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் 11 ஐடிஐகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் உள்ள 102 தொழிற்பயிற்சி நிலையங்களில் 53 தொழிற்பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும், 49 தொழில் பயிற்சி நிலையங்களில் 93 சதவீதத்திற்கும் மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

தொழில்பயிற்சி 4.0:

நடப்பு கல்வியாண்டில் 102 ஐ.டி.ஐ கல்லூரிகளில் 76 சதவீதம் மாணவர்கள் வளாகத் தேர்விலே தேர்ச்சி பெற்று பணி கிடைத்துள்ளதாக கூறிய அவர், தொழில்பயிற்சி 4. 0 என்ற திட்டத்தின் அடிப்படையில் டாடா நிறுவனத்துடன் 2877 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு தொழில் பயிற்சி 4.0 தரத்தில் ரோபோடிக்ஸ், அட்வான்ஸ் இன்டர்நெட், அட்வான்ஸ் வெல்டிங், அட்வான்ஸ்ட் பெயிண்டிங், அட்வான்ஸ்ட் பிளம்பிங், வெல்டிங் அனைத்து பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருவதால், தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  இந்த இடியாப்ப சிக்கலை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று.... அமைச்சர் கே.என்நேரு!!