வேளாண் திருத்தச் சட்டத்தை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை....எல். முருகன்

வேளாண் திருத்தச் சட்டத்தை எந்த ஒரு விவசாயியும் எதிர்க்கவில்லை என்றும் தமிழகத்தில் தேவையில்லாமல் வேளாண் திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்து வருவதாவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேளாண் திருத்தச் சட்டத்தை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை....எல். முருகன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்,

வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகள்,  விளைவிக்கும் பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ள வசதி செய்து தருகிறது என்றும் தேவையில்லாமல் தமிழக அரசு இதற்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி இருக்கிறது என கூறினார்.

இச்சட்டத்தை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை, அரசியல் கட்சிகள் தான் எதிர்க்கின்றன என்றார். தொடர்ந்து பேசிய அவர் காவிரி பிரச்சனையில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் நலன் காக்கப்படும் என கூறினார்.