” நிர்மலா சீதாராமனும் தமிழிசையும் அப்போது சட்டமன்றத்தில் இல்லவே இல்லை ” - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் 

”  நிர்மலா சீதாராமனும்  தமிழிசையும் அப்போது சட்டமன்றத்தில் இல்லவே இல்லை ” -  முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் 

சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது நடந்தது என்ன? என்பது குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்  தெரிவித்துள்ளார். 

சென்னை  விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

”1989-ம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் அரசியலில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. தமிழிசையும் அரசியலில் இருக்க வாய்ப்பு இல்லை. மூப்பனார் காங்கிரஸ் கட்சி தலைவர். தமிழிசை தந்தை குமரி ஆனந்தன் துணை தலைவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கலைஞர் முதலமைச்சர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சி தலைவர்.

நான் பிரதான எதிர்கட்சியின் துணை தலைவர். சட்டமன்றத்தில் தற்போது இருப்பது போல் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது. கலைஞர், அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த பட்ஜெட்டை டேபிள் போல் வைத்து வாசித்தார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்சனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கலைஞர் சத்தம் போட்டு திரும்பும் போது கண்ணாடி கழுன்று கீழே விழுந்தது. அப்போது தடுமாறினார்.

உடனே மூத்த அமைச்சர்கள் கலைஞரை அழைத்து சென்று விட்டனர். பின்னால் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கலைஞர் முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை வீசினார். நாற்காலி எல்லாம் எடுத்து வீச முடியாது. மைக்கை உடைத்து புத்தகங்களை வீசி கொண்டு இருந்தனர். 

ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும் அப்போதைய அதிமுக கொறடா கே.கே. எஸ். எஸ்.ஆர் நின்றோம். அப்போதும் சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையில் விழுந்தது. என் மீதும் விழுந்தது. புத்தகம் விழுந்ததால் தலை களைந்தது உண்மை. வீட்டிற்கு போகலாம் என்றதும் ஜெயலலிதா சரி என்றார். உடனே பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான்.  ஆனால் அடி தடியோ ரத்த காயங்களோ கிடையாது.

கலைஞர் முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும் ஜெயலலிதா சேலை பிடித்து இழத்தாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. கலைஞர் முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடித்து இழக்கவும் இல்லை. கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்தது உண்மை. இது தான் சட்டமன்றத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

அப்போது நடந்ததை பார்த்தவர்கள் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் தான். முப்பனார் உயிருடன் இல்லை. குமரி ஆனந்தனை கேட்டால் சொல்லுவார். இது பற்றி குமரி ஆனந்தன் மகள் தமிழிசைக்கு என்ன தெரியும். நிர்மலா சீத்தாராமனுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. பாராளுமன்றத்தில் மகாபாரதம், பாஞ்சாலி கதை வந்ததும் நிர்மலா சீத்தாராமன் ஒரு கதையை சொல்கிறார். 

மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. 100 நாளுக்கு மேலாக விட்டது. 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அமைதி திரும்பவில்லை. பிரதமர் ஒரு நாள் கூட அங்கு சென்று பார்க்கவில்லை. எந்தவித உணர்ச்சியை கூட வெளி காட்ட வில்லை. பாராளுமன்றத்தில் கூட 2 நிமிசம் கூட மணிப்பூர் பற்றி பிரதமர் பேசவில்லை. பேச்சாளர் போல் பேசினாரே தவிர நாட்டின் பிரதமர் மாதிரி பதில் இல்லாதது வருத்தத்தக்கது. குமரி ஆனந்தன் மீது புத்தகங்கள் வீசியதில் அடிப்பட்டு இருக்கலாம்”, இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க    |  " ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சரின் கருத்து வருத்தம் அளிக்கிறது" - தமிழிசை சவுந்திரராஜன்.