தேனிலவுக்காக வெளிநாடு சென்ற புதுமணத் தம்பதியை பல இலட்சம் செலவு செய்து சடலமாக மீட்ட உறவினர்கள்..!

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் விபூஷ்னியா டாக்டராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு டாக்டரான லோகேஸ்வரன் என்பவருக்கும் ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் முடிந்த கையோடு தேனிலவு கொண்டாட இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவிற்கு தேனிலவு சென்றபோது நீரில் மூழ்கி இருவரும் இறந்து போனார்கள்.  

இந்த நிலையில் புதுமண தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது எப்படி அவர்களது உடலை  கொண்டு வருவதில் எவ்வளவு சவால்கள் இருந்தது என்பதை குறித்து அவது உறவினர் ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.

 அது குறித்து அவர் கூறியதாவது :  ஜூன் 1 ம் தேதி இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது பின்னர் தேன்நிலவு செல்வதற்காக விமானம் மூலம் கடந்த மூன்றாம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றனர். பாலி தீவில் புதுமண தம்பதிகள் மட்டும் போட்டோ சூட் எடுப்பதற்காக செல்வது வழக்கம் இந்த நிலையில் அங்கிருந்த போட்டில் நாள் ஒன்றுக்கு 150 புதுமண தம்பதிகளை அழைத்து செல்லப்படுவார்கள். 

ஏழாம் தேதி 150 ஜோடிகளில் லோகேஸ்வரனும், விபூஷ்னியும் சென்றனர். கடலுக்கு நடுவே இருந்த பாறையின் இடையில் நின்று போட்டோ சூட் நடத்திய போது கடல் அலை வேகமாக இருவர் மீதும் அடித்ததில் கடலுக்குள் இழுத்து சென்றதாகவும் இதையடுத்து பதறி போனவர்கள் கடலில் இழுத்து சென்ற இருவரையும் தேடும் பணிகளில் ஈடுபட்ட நிலையில் லோகேஸ்வரன் உடல் உடனடியாக கிடைத்து விட்டதாகவும் விபூஷ்னியா உடல் மட்டும் இரண்டு நாட்கள் கழித்து கிடைத்ததாகவும் இருவரும் இறந்து போன தகவல் ஏழாம் தேதி இரவு தங்களுக்கு தெரிய வந்த நிலையில் இங்கிருந்து தங்களது உறவினர்கள் மூன்று பேர் விமானம் மூலம் இந்தோனேசியா சென்று அங்கிருக்கும் போலீசாரிடம் நடந்தது குறித்து கேட்டு அறிந்தனர்.

இந்த நிலையில்,  அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் எம்பார்மிங் செய்து அங்குள்ள நீதிமன்ற நீதிபதிகள் இது விபத்து தான் என்பதை உறுதி செய்த பிறகு உடலை அங்கிருந்து சென்னைக்கு எடுத்து வந்ததாகவும் இந்தோனேஷியாவில் இருந்து இருவரின் உடல்களையும் எடுத்து வருவதற்கு பல லட்சம் செலவு செய்ததாகவும் கூறினார். 

விபத்து நடந்த உடனேயே இங்கிருந்து உறவினர்கள் மூன்று பேர் அங்கு சென்று தூதரகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து இவ்வளவு தொகை செலவு செய்ததால் இரண்டு வாரத்தில் உடலை கொண்டு வந்ததாகவும் இல்லை என்றால் உடலை கொண்டு வருவதில் மேலும் சில வாரங்கள் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருவரின் உடல்களும் வந்த நிலையில் லோகேஸ்வரனின் பெற்றோர் அங்கு சடங்கு செய்துவிட்டு அவரது உடலை சேலத்திற்கு எடுத்து சென்று விட்டதாகவும் விபூஸ்னியா உடலை தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டதாக உருக்கமாக பேசினார்.

புதுமணத் தம்பதியர் இறந்த செய்தியே உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர்களின் உடல் மீது வருவதற்கும் கூட  அவர்கள் எதிர்கொண்ட  சிரமங்கள் மேலும் அவர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பே வெகு விமரிசையாக திருமணம் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி சந்தோசமாக வாழ்வார்கள்  என எதிர்பார்த்திருந்த உறவினர்கள் அவர்களை உயிரற்ற சடலங்களாக மீட்கவும் செலவுகள்  செய்து போராடியிருக்கும்  நிலை இன்னும் வேதனையளிக்கிறது.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் விபூஷ்னியா டாக்டராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு டாக்டரான லோகேஸ்வரன் என்பவருக்கும் ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் முடிந்த கையோடு தேனிலவு கொண்டாட இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவிற்கு தேனிலவு சென்றபோது நீரில் மூழ்கி இருவரும் இறந்து போனார்கள்.  

இந்த நிலையில் புதுமண தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது எப்படி அவர்களது உடலை  கொண்டு வருவதில் எவ்வளவு சவால்கள் இருந்தது என்பதை குறித்து அவது உறவினர் ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.

 அது குறித்து அவர் கூறியதாவது : ஜூன் 1 ம் தேதி இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது பின்னர் தேன்நிலவு செல்வதற்காக விமானம் மூலம் கடந்த மூன்றாம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றனர். பாலி தீவில் புதுமண தம்பதிகள் மட்டும் போட்டோ சூட் எடுப்பதற்காக செல்வது வழக்கம் இந்த நிலையில் அங்கிருந்த போட்டில் நாள் ஒன்றுக்கு 150 புதுமண தம்பதிகளை அழைத்து செல்லப்படுவார்கள். 

ஏழாம் தேதி 150 ஜோடிகளில் லோகேஸ்வரனும், விபூஷ்னியும் சென்றனர். கடலுக்கு நடுவே இருந்த பாறையின் இடையில் நின்று போட்டோ சூட் நடத்திய போது கடல் அலை வேகமாக இருவர் மீதும் அடித்ததில் கடலுக்குள் இழுத்து சென்றதாகவும் இதையடுத்து பதறி போனவர்கள் கடலில் இழுத்து சென்ற இருவரையும் தேடும் பணிகளில் ஈடுபட்ட நிலையில் லோகேஸ்வரன் உடல் உடனடியாக கிடைத்து விட்டதாகவும் விபூஷ்னியா உடல் மட்டும் இரண்டு நாட்கள் கழித்து கிடைத்ததாகவும் இருவரும் இறந்து போன தகவல் ஏழாம் தேதி இரவு தங்களுக்கு தெரிய வந்த நிலையில் இங்கிருந்து தங்களது உறவினர்கள் மூன்று பேர் விமானம் மூலம் இந்தோனேசியா சென்று அங்கிருக்கும் போலீசாரிடம் நடந்தது குறித்து கேட்டு அறிந்தனர்.

இந்த நிலையில்,  அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் எம்பார்மிங் செய்து அங்குள்ள நீதிமன்ற நீதிபதிகள் இது விபத்து தான் என்பதை உறுதி செய்த பிறகு உடலை அங்கிருந்து சென்னை
எடுத்து வந்ததாகவும் இந்தோனேஷியாவில் இருந்து இருவரின் உடல்களையும் எடுத்து வருவதற்கு பல லட்சம் செலவு செய்ததாகவும் கூறினார். 

விபத்து நடந்த உடனேயே இங்கிருந்து உறவினர்கள் மூன்று பேர் அங்கு சென்று தூதரகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து இவ்வளவு தொகை செலவு செய்ததால் இரண்டு வாரத்தில் உடலை கொண்டு வந்ததாகவும் இல்லை என்றால் உடலை கொண்டு வருவதில் மேலும் சில வாரங்கள் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருவரின் உடல்களும் வந்த நிலையில் லோகேஸ்வரனின் பெற்றோர் அங்கு சடங்கு செய்துவிட்டு அவரது உடலை சேலத்திற்கு எடுத்து சென்று விட்டதாகவும் விபூஸ்னியா உடலை தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டதாக உருக்கமாக பேசினார்.

புதுமணத் தம்பதியர் இறந்த செய்தியே உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர்களின் உடல் மீது வருவதற்கும் கூட  அவர்கள் எதிர்கொண்ட  சிரமங்கள் மேலும் அவர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பே வெகு விமரிசையாக திருமணம் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி சந்தோசமாக வாழ்வார்கள்  என எதிர்பார்த்திருந்த உறவினர்கள் அவர்களை உயிரற்ற சடலங்களாக மீட்கவும் செலவுகள்  செய்து போராடியிருக்கும்  நிலை இன்னும் வேதனையளிக்கிறது.

இதையும் படிக்க     |  முதலமைச்சர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுரை!