தமிழகத்தில் ஊரடங்கு: வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!  

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தநிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் சந்தைகளில், கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.